உள்ளூர் செய்திகள்

விபத்தில் மேற்கூரைகள் முழுவதுமாக சேதம் அடைந்ததுள்ளதை படத்தில் காணலாம்.

பல்லடத்தில் கடைக்குள் புகுந்த சரக்கு லாரி

Published On 2023-06-09 17:04 IST   |   Update On 2023-06-09 17:04:00 IST
  • கேரளாவில் இருந்து கொப்பரை தேங்காய் ஏற்றிக்கொண்டு காங்கேயம் செல்வதற்காக வந்துள்ளார்.
  • இரும்பு மேற்கூரைகள் முழுவதுமாக சேதம் அடைந்தது.

பல்லடம் :

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் பினோய்(வயது 38).சரக்கு லாரி ஓட்டுநர். நேற்று அதிகாலை கேரளாவில் இருந்து கொப்பரை தேங்காய் பாரம் ஏற்றிக்கொண்டு காங்கேயம் செல்வதற்காக பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் வந்துள்ளார்.

லாரி பல்லடம் - செட்டிபாளையம் ரோடு, கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு அருகே வந்தபோது ஓட்டுநர் பினோய் தூக்க அசதியில் லாரியை இயக்கியதால் ரோட்டோரமாக இருந்த இயற்கை அங்காடி கடைக்குள் லாரி புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அங்கிருந்த இரண்டு கடைகளின் முன் பகுதியில் இருந்த இரும்பு மேற்கூரைகள் முழுவதுமாக சேதம் அடைந்தது. இந்த விபத்து காலை நேரத்தில் நடைபெற்றதால் கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கடைகளுக்கு வரவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை பிடித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News