உள்ளூர் செய்திகள்

கேட்பாரற்று கிடக்கும் பைக்கை படத்தில் காணலாம்.

வெள்ளகோவிவலில் மாதக்கணக்கில் கேட்பாரற்று கிடக்கும் பைக்

Published On 2022-08-03 11:02 IST   |   Update On 2022-08-03 11:02:00 IST
  • கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.
  • குற்ற சம்பவங்களில் பயன்படுத்தியவிட்டு விட்டு சென்றார்களா என்று போலீசார் விசாரணை.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் அருகே உள்ள உப்புபாளையம் என்ற இடத்தில் கடந்த 2 மாதங்களாக கேட்பாரற்று பைக் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் யாருடையது, ஏதேனும் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.

எவராவது திருடி கொண்டு வந்து இங்கே நிறுத்தி சென்று விட்டார்களா? அல்லது குற்ற சம்பவங்களில் பயன்படுத்தியவிட்டு விட்டு சென்றார்களா? என்று தெரியவில்லை. இது மோட்டர் சைக்கிளை போலீசார் மீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இதேபோல் கடந்த வாரம் வெள்ளகோவில் எல்.கே.ஏ. நகர் என்ற இடத்தில் ஒரு பள்ளி அருகே ஒரு பைக் ரோட்டின் ஓரமாக கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News