உள்ளூர் செய்திகள்

நுகர்வோர் விழிப்புணர்வு பிரிவினர் மனு கொடுக்க வந்த காட்சி.

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் 30 நாட்களுக்குள் பதில் தர வேண்டும் - நுகர்வோர் விழிப்புணர்வு பிரிவினர் மனு

Published On 2022-08-01 11:23 GMT   |   Update On 2022-08-01 11:23 GMT
  • பல துறைகளில் சரியாக பதில் கொடுக்காமல் காலம் கடத்தி வருகிறார்கள்.
  • உள்நோக்கத்தோடு சமாதானம் பேசி பதில் கொடுக்க சொல்கின்றார்கள்.

வீரபாண்டி :

நுகர்வோர் விழிப்புணர்வு பிரிவு திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணசாமி திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ளமனுவில் கூறியிருப்பதாவது:-

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கேட்கும்கேள்விகளுக்கு 30 நாட்களுக்குள் பதில் தரவேண்டும். பல துறைகளில் சரியாக பதில் கொடுக்காமல் காலம் கடத்தி குழப்பமான பதிலை தருகின்றார்கள்.தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தாலும் வருடக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டு பொது தகவல் அலுவலரையும் மனு தாரர்களையும் நேரில் அழைத்து உள்நோக்கத்தோடு சமாதானம் பேசி பதில் கொடுக்க சொல்கின்றார்கள். மேலும் பதில் தராத பொது தகவல் அலுவலர் மீது சட்டப்படியான எந்த குற்றவியல் நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் தகவல் அறியும் ஆணைய கூட்டத்தை நடத்த வேண்டும் எனகூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News