உள்ளூர் செய்திகள்
புகையிலை பொருட்களுடன் கடைக்காரர் கைது செய்யப்பட்ட காட்சி

வெள்ளகோவிலில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது

Published On 2022-10-07 06:20 GMT   |   Update On 2022-10-07 06:20 GMT
  • வெள்ளகோவில் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்ட் மேற்பார்வையில், போலீஸஇன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்
  • ராமகிருஷ்ணன் என்பவரது மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் நகர் பகுதியில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில், காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்ட் பார்த்திபன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், வெள்ளகோவில் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பாலமுருகன் ஆகியோர் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது வெள்ளகோவில், இந்திரா நகர் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவரது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்து ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தனர்.

அதேபோல் வெள்ளகோவிலில், மூலனூர் ரோட்டில் பிரபாகரன் என்பவரது டீக்கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 10 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றி பிரபாகரனை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வெள்ளகோவில் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை மற்றும் குட்கா, கான்ஸ் மற்றும் கஞ்சா போன்றவற்றை யாரேனும் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ சட்டப்படி கடுமையாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News