உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட சுதாகர் மற்றும் அரிசி மூட்டைகள்,லாரி ஆகியவற்றை படத்தில் காணலாம்.

பல்லடம் அருகே 14.5 டன் கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-11-16 06:06 GMT   |   Update On 2022-11-16 06:06 GMT
  • போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
  • மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியில், திருப்பூர் குடிமை பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சாந்தி ,சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும், ரமேஷ் சரவணன், சரவணகுமார், உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதில், மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த சுதாகர் என்பவரை கைது செய்த போது, தஞ்சாவூரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் அந்த ரேசன் அரிசிகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கேரளாவுக்கு அனுப்பியது தெரியவந்தது .இதை யடுத்து சுமார் 6 டன் ரேஷன் அரிசி மற்றும் குருணை அரிசி உள்ளிட்ட 14.5 டன் அரிசி மூட்டைகள்,லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அரிசி மூட்டைகளை விற்பனைக்கு அனுப்பிய மாரிமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News