உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

13 புதிய துணை மின் நிலையத்திற்கான ஆயத்த பணிகள் தொடக்கம்

Published On 2023-07-28 03:48 GMT   |   Update On 2023-07-28 03:48 GMT
  • பனியன் தொழில், விசைத்தறி, நூற்பாலை தொழில்களும் அதிகம் இருக்கிறது.
  • ஏற்கனவே இயங்கும் 7 துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளன.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் விவசாயமும், தொழில்வளமும், வேலை வாய்ப்பும் மிகுந்த மாவட்டமாக இருக்கிறது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக பனியன் தொழில், விசைத்தறி, நூற்பாலை தொழில்களும் அதிகம் இருக்கிறது.தொழில் வளர்ச்சி காரணமாக திருப்பூர் மாவட்டத்துக்கான மின்தேவையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அவ்வகையில் இம்மாவட்டத்தில் மட்டும் 13 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்து ஆயத்தப் பணியும் துவங்கியுள்ளது.

அதன்படி காங்கயம் பெரியார் நகரில் ரூ. 1.62 கோடி மதிப்பில், பல்லடம் நாரணாபுரத்தில் 2.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு துணை மின்நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.பல்லடம் - முத்தணம்பாளையம் கிராமம், அமராவதிபாளையம், உகாயனூர் கிராமத்தில் துணை மின்நிலையங்கள் அமைய தலா 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் வடக்கு காளிபாளையம் கிராமம் தாண்டாக்கவுண்டன்பாளையம், நெருப்பெரிச்சல், காவிலிபாளையம், பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட, அணைப்பாளையம், திருப்பூர் வடக்கு தொகுதி, கூலிபாளையத்திலும் துணை மின்நிலையம் அமைய உள்ளது.காங்கயம் மடவிளாகம், கத்தாங்கன்னி, கம்பளியாம்பட்டி பகுதிகளில் துணை மின் நிலையம் அமைக்க இடம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பல்லடம் - காங்கயம் ரோடு துணை மின்நிலையம், விஜயாபுரம் துணை மின்நிலையம், தாராபுரம் - சங்கராண்டாம்பாளையம், சக்திபாளையம் துணை மின்நிலையம் அமைக்க இடம் தேடும் பணி நடந்து வருகிறது.

காங்கயம் தொகுதி - குறுக்கத்தி, ராசாத்தாவலசு, காடையூர், பல்லடம் - பொங்கலூர், தாராபுரம் தொகுதி- செலாம்பாளையம் துணை மின்நிலையம் அமைக்க அனுமதி பெறப்பட்டு ஆயத்த பணி துவங்கியுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், திருப்பூர், பல்லடம், உடுமலை மின்பகிர்மான வட்டங்களில் 13 இடங்களில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். ஏற்கனவே இயங்கும் 7 துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளன. மொத்தம், 144 கோடி ரூபாய் மதிப்பில் இப்பணிகள் நிறைவு பெற்றதும் விவசாயம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்வினியோகம் மேம்படுத்தப்படும் என்றனர்.ன

Tags:    

Similar News