உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவான்.

திருப்புறம்பியம்- சூரியனார்கோயிலில் குருப்பெயர்ச்சி விழா

Published On 2023-04-23 16:02 IST   |   Update On 2023-04-23 16:02:00 IST
  • குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
  • பின்னர், வெள்ளி கவச அலங்காரத்தில் குருபகவான் காட்சியளித்தார்.

சுவாமிமலை:

கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் சாட்சிநாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் ராஜகோபுர வாயிலுக்கு வெளியே தனிக்கோவிலில் அனுக்கிரக மூர்த்தியாக குருபகவான் குடிகொண்டுள்ளார்.

தமிழகத்திலேயே தனிக்கோவிலில் குருபகவான் எழுந்தருளி அருள்பாலிக்கும் தலம் இதுவாகும்.

மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

இதேபோல், திருவிடைமருதூர் அருகே சூரியனார்கோயிலில் உள்ள உஷா தேவி சாயா தேவி உடனாகிய சிவசூரிய பெருமான் கோவிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று குருபகவானுக்கு மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு கட அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர், வெள்ளி கவச அலங்காரத்தில் குருபகவான் காட்சியளித்தார்.

குருபெயர்ச்சி அடையும் நேரமான 11. 21 மணிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

மேலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை வழிபட்டனர்.

Tags:    

Similar News