உள்ளூர் செய்திகள்
எம்.எல்.ஏ. பற்றி அவதூறாக பேசிய நபர் மீது புகார்
- தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
கந்திலி தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் வெங்களாபுரம் பகுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.கே. மோகன்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.
அப்போது கூட்டத்தில் புகுந்து வாலிபர் ஒருவர் நல்லதம்பி எம்.எல்.ஏ. வை பார்த்து வெங்களாபுரம் பகுதியில் இருந்து பொன்னேரி செல்லும் சாலை ஏன் சீரமைக்கப்பட வில்லை என தகாத வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து நல்ல தம்பி எம்.எல்.ஏ. திருப்பத்தூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.