உள்ளூர் செய்திகள்

நாட்டறம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

தாலுகா அலுவலகம், ரேசன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2023-04-07 15:22 IST   |   Update On 2023-04-07 15:22:00 IST
  • பொருட்களின் தரம் குறித்தும் ேசாதனை
  • ஆதார் மையத்தை பார்வையிட்டார்

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகம் மற்றும் ரேசன் கடைகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.

அப்போது தாலுகா அலுவலகத்தில் பராமரிக்கப் பட்டு வரும் பல்வேறு பதிவேடுகள், நாட்டறம்பள்ளி கற்பகம் கூட்டுறவு ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும், ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியிலும் ஆய்வு செய்தார்.

மாணவர்களுக்கு சுத்தமாகவும், தரமாகவும் உணவினை தயார் செய்து வழங்க வேண்டும் எனவும், விடுதி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என விடுதி காப்பாளருக்கு அறிவுறுத்தினார்.

தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பதிவேடு, இ-ஆபிஸ் பணிகள், பட்டா மாற்றம், 23 வகையான சான் றிதழ் வழங்கப்படும் பணிகளை பார்வையிட்டு நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஆதார் மையத்தை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது தாசில்தார்கள் குமார், சுமதி, வருவாய்த்துறை பணியாளர்கள், விடுதி காப்பாளர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News