பச்சூர் பகுதியில் மாற்றுப் பாதை அமைக்க கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
ரெயில்வே மேம்பாலம் அமைப்பதில் மாற்றுப்பாதையை அமைக்க கலெக்டர் ஆய்வு
- அறிக்கை சமர்பிக்க அதிகாரிக்கு உத்தரவு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி வட்டம் பச்சூர் ரெயில் நிலையத்தில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
இப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் தற்போது பயன்படுத்துகின்ற பாதையை அடைப்பதற்காக தென்மேற்கு ரெயில்வேவின் சார்பில் பொது மக்கள் மாற்றுப்பாதை செல்வதற்காக தடையின்மை சான்று கேட்டு கோரிக்கை மனுவினை அளிக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் மாற்றுப்பாதை செல்வதற்காக மாற்றுப்பதை நீர்நிலை புறம்போக்கு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு நாளைக்கே (இன்று) அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் இலட்சுமி, உதவி கோட்ட பொறியாளர் விக்ரம் கஹானோலியா, வட்டாட்சியர் க.குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.