உள்ளூர் செய்திகள்

சாலை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

Published On 2023-06-29 14:31 IST   |   Update On 2023-06-29 14:31:00 IST
  • 7 வாகனங்கள் பறிமுதல் செய்து அதிகாரிகள் எச்சரிக்கை
  • ஆட்டோக்களில் அதிகளவு ஆட்களை ஏற்றி செல்வதாக புகார்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் நகரில் அனுமதி இல்லாமல் வாகனங்கள் இயக்கப்படு வதாகவும். ஆட்டோக்களில் அதிகளவு ஆட்களை ஏற்றி செல்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து துறையினர் ஆய்வு நடத்தி, விதிகளை பின்பற்றாத வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, திருப்பத்தூர் வட்டார போக்கு வரத்து அலுவலர் காளியப்பன் மேற்பார்வையில், திருப்பத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் குழுவினர் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அதிக அளவு ஆட்களை ஏற்றி வந்த 3 ஆட்டோக்களையும், அனுமதி, உரிமம் மற்றும் பர்மிட் இல்லாமல் இயங்கி வந்த 4 சரக்கு வாகனங்கள் என மொத்தம் 7 வாகனங்களை வட்டார போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூரில் சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும்நடவடிக்கை எடுப்பதுடன், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News