உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்
- நாளை நடக்கிறது
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன்வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உலகதண்ணீர் தினத்தை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட் சிகளிலும் முற்பகல் 1 மணிக்கு சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொ ருள், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவி னம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம், பாரத் நெட் இணையதள வசதி உள்பட வளர்ச்சிப்பணிகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் விவாதிக்க வேண்டும்.
கிராம சபைக் கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையா ளர்களாக கலந்து கொள்ள வேண்டும். இதற்காக ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்து உத்தர விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.