உள்ளூர் செய்திகள்

சாராயம் கடத்தி வந்த பைக் பறிமுதல்

Published On 2023-02-22 15:13 IST   |   Update On 2023-02-22 15:13:00 IST
  • ரோந்து பணியின் போது சிக்கியது
  • போலீசார் விசாரணை

வாணியம்பாடி:

வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையில் மதுவிலக்கு போலீசார் தமிழக-ஆந்திரா எல்லையில் உள்ள மாதகடப்பா மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சாராயத்தை லாரி டியூப்பில் பதுக்கி மோட்டார் சைக்கிள் மூலம் கடத்தி வந்த நபரை நிறுத்தி பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் சாராயம் அடைத்து வைத்திருந்த லாரி டியூப் மற்றும் மோட்டார்சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு வனப்பகுதிக்குள் நுழைந்து தப்பி சென்றார்.

பின்னர் போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் தப்பி ஓடியவரை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக் குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News