search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bike confiscation"

    • அதிக ஒலி, மாசு ஏற்படுத்தியதால் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் ஏலகிரி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக வேகமாகவும், அதிக ஒலி எழுப்பியவாறு 2 இருசக்கர வாகனங்கள் இயக்கி வந்துள்ளனர்.

    பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான அதிகா ரிகள் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது அதிவேகமாகவும், அதிகசத்தம் எழுப்பியவாறு வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அந்த இரண்டு பைக்கும் விலை உயர்ந்தது என்பதும், சொகுசு ரக இருசக்கர வாகனத்தை ஒரே நிறத்தில் வாங்கி வைத்துள்ளனர்.

    என்பதும் அதிக சத்தம் எழுப்பும் வகையில் மாற்று சைலன்சர்கள் பொருத்தி வாகனங்களை இயக்கி வந்தது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து 2 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த 2 பைக்கில் மொத்த மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • ரோந்து பணியின் போது சிக்கியது
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையில் மதுவிலக்கு போலீசார் தமிழக-ஆந்திரா எல்லையில் உள்ள மாதகடப்பா மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சாராயத்தை லாரி டியூப்பில் பதுக்கி மோட்டார் சைக்கிள் மூலம் கடத்தி வந்த நபரை நிறுத்தி பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் சாராயம் அடைத்து வைத்திருந்த லாரி டியூப் மற்றும் மோட்டார்சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு வனப்பகுதிக்குள் நுழைந்து தப்பி சென்றார்.

    பின்னர் போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் தப்பி ஓடியவரை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக் குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    ×