உள்ளூர் செய்திகள்

ஏலகிரி மலையில் தரமற்ற உணவுகள் விற்பனை

Published On 2022-08-28 09:05 GMT   |   Update On 2022-08-28 09:05 GMT
  • உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம்
  • நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் ஏலகிரி மலை அமைந்துள்ளது. இங்கு அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி, மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலைக்கு வந்து செல்கின்றனர்.

மேலும் இங்கு படகு இல்லம், இயற்கை பூங்கா, சாகச விளையாட்டுகள், மற்றும் முருகன் கோவில் போன்ற அதிக முக்கிய சுற்றுலா தளங்கள் உள்ளதால் சுற்றுலா பயணிகளை கவர்ந்த வண்ணம் உள்ளது எப்பொழுதும் ஒரே சமச்சீரான சீதோசனம் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகளை ஏலகிரி மலை ஈர்க்கிறது.

இந்நிலையில் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், இங்கு தரமான உணவுகள் கிடைப்பதில்லை என்றும், அதிக விலைக்கு விற்கப்படுகிறது என்றும், விலைக்கேற்ற உணவுகள் கிடைப்பதில்லை, பதப்படுத்தப்பட்ட மற்றும் கலப்பட உணவுகள் அதிகளவில் விற்கப்படுகிறது எனவும் சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏலகிரி மலையில் தரமான உணவுகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News