ஆஸ்பத்திரியில் எலிகள் சுற்றி திரிவதை படத்தில் காணலாம்.
அரசு ஆஸ்பத்திரியில் எலிகள் அட்டகாசம்
- நோயாளிகள் கடும் அவதி
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், டவுன் பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பிரசவம் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளுக்காக இங்கு வந்து செல்கின்றனர். மேலும் உள்நோயாளிகளாக அதிக அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக குழந்தைகள் பிரிவு, பிரசவ பிரிவு, ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு மற்றும் சிறப்பு சிகிச்சை பிரிவு என பல்வேறு பிரிவுகள் உள்ள இந்த ஆஸ்பத்திரியில் அங்காங்கே ஓட்டைகள் உள்ளதால் அதிகளவில் பெருச்சாளிகள், எலிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக உள்நோயாளிகள் படுக்கை யில் இருக்கவே மிகவும் பயத்துடன் தூக்கத்தை தொலைத்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் கழிவறைக்கு சென்றாலும் படுக்கையில் சுற்றி எலிகள் அதிகமாக இருப்பதால் கழிவறைக்கு செல்லவும் அச்சப்படுகின்றனர்.
ஏற்கனவே பல்வேறு நோய்கள் பரவி வரும் நிலையில் தற்போது மருத்துவமனையில் பெருச்சாளிகள் மற்றும் எலிகளின் அட்டகாசத்தால் மேலும் நோய்கள் பரவும் அச்சம் உள்ளதாக நோயாளிகள் பீதியில் உள்ளனர்.
இந்த ஆஸ்ப்பதிர்க்கு வரவே அச்சபடுகின்றனர். நோயாளிகளுக்கு வைக்கப்படும் உணவு மீது எலிகள் அமர்ந்து சாப்பிட்டு செல்வதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் படுக்கையறையில் எலிகள் சுற்றி திரிவதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து மருத்துவதுறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.