உள்ளூர் செய்திகள்
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ரூ.27 லட்சத்தில் புதிய மருந்து கிடங்கு கட்டிடம்
- நுழைவாயில் திறக்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மருந்து கிடங்கு மற்றும் நுழைவாயில் வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.
இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.27 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மருந்து கிடங்கு மற்றும் நுழைவாயில் கட்டப்பட்டது. விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் டாக்டர். சிவசுப்பிரமணி முன்னிலை வகித்தார்.
புதிய கட்டிடத்தையும் நுழைவாயிலையும் கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
உடன் டாக்டர்.செந்தில் , நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.