உள்ளூர் செய்திகள்
மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
- டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபரீதம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லகுண்டா அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந் தோஷ். இவர் நேற்று மாலை கிருஷ்ணகிரி மாவட்டம் பர் கூரில் இருந்து எம் சாண்ட் மணல் ஏற்றிக் கொண்டு நாட்டறம்பள்ளி வழியாக பச் சூர் நோக்கி சென்றுள்ளார்.
பச்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் டிரைவர் சந்தோஷ் சிறிய காயங்களுடன் அதிர்ஷ் டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.