உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் மாய விநாயகர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை கலெக்டர் அமர்குஷ்வாஹாவை நேரில் சந்தித்து வழங்கிய போது எடுத்த படம்.

பழமை வாய்ந்த மாய விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-01-25 09:42 GMT   |   Update On 2023-01-25 09:42 GMT
  • திருப்பத்தூரில் வருகிற 2-ந் தேதி நடக்கிறது
  • அமைச்சர்கள், கலெக்டர் பங்கேற்கின்றனர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் டவுன் நகரத்து வைசியர்கள் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட சுயம்பு மாய வினாயகர் சுவாமி கோயில் இராஜகோபரம், விமானம், ஜூர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் வருகிற 2-ம் தேதி மங்கல இசை உடன் தொடங்கி விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, கோ பூஜை, பூர்ணங்குதியுடன் நடைபெறுகிறது.

தொடர்ந்து முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, ராஜ கோபுரங்களுக்கு தானியம் கலசம் வைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து இன்னிசை கலைஞர் குமாரின் பக்தியும் சக்தியும் என்ற பக்தி பாடல்கள் இன்னிசை கச்சேரிநடைபெறுகிறது.

தொடர்ந்து ராஜா கோபுரத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது நிகழ்ச்சியில் பொதுப் பணி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் எ வ. வேலு, கைத்தறி மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர். காந்தி கலெக்டர் அமர்குஷ்வாஹா, போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகரத்து வைசியர்கள் சங்கம் தலைவர் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News