உள்ளூர் செய்திகள்

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேருக்கு ஜெயில்

Published On 2023-07-02 14:06 IST   |   Update On 2023-07-02 14:06:00 IST
  • சந்தேகிக்கும் வகையில் சுற்றித்திரிந்தவர்களை மடக்கி பிடித்தனர்
  • கார், பைக், ரொக்க பணம் உள்ளிட்டவைகள் பறிமுதல்

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் வாணியம்பாடி குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு நாட்றம்பள்ளி பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 47), பெருமாள் பேட்டையை சேர்ந்த ரவீந்திரன் (34) என்பதும் இவர்கள் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், பைக், ரொக்க பணம் ரூ.2 ஆயிரம், 2 கிராம் தாலி, 2 வெள்ளி வேல் மற்றும் பித்தளை மணி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் போலீசார் கைது செய்யப்பட்டவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News