உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் எஸ்.பி. பேசிய காட்சி.

விநாயகர் சதுர்த்தி விழாவில் அசம்பாவிதம் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

Published On 2022-08-26 16:16 IST   |   Update On 2022-08-26 16:16:00 IST
  • ஒபோலீசாருக்கு எஸ்.பி. உத்தரவு
  • 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்

வாணியம்பாடி:

வாணியம்பாடி அம்பூர்பேட்டை அடுத்த பாவடிதோப்பு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூர் எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வாணியம்பாடி போலீஸ் சரக்கத்திற்குட்பட்ட வாணியம்பாடி, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, திம்மம்பேட்டை மற்றும் அம்பலூர் போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு வாணியம்பாடி டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன் முன்னிலை வகித்தார்.

இன்ஸ்பெக்டர்கள் பழனி, நாகராஜ், அருண்குமார், செல்லபாண்டியன், ஜெயலட்சுமி, தமிழரசி, மற்றும் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட எஸ்.பி. விநாயகர் சதுர்த்தி விழாவினை எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படாமல் சிறப்பான பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் படி போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News