உள்ளூர் செய்திகள்

வருமானவரித்துறையினர் சோதனை நடத்தும் நிறுவனத்தை படத்தில் காணலாம்.

ஆம்பூர் ஷூ கம்பெனியில் வருமான வரி அதிகாரிகள் சோதனை

Published On 2023-01-21 14:47 IST   |   Update On 2023-01-21 14:47:00 IST
  • 3-வது நாளாக தொடர்ந்தது
  • தொழிற்சாலையில் இருந்து ஆவணங்களை எடுத்து வந்தனர்

ஆம்பூர்:

ஆம்பூரில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் சென்னை வருமானம் வரித்துறை முதன்மை சந்தோஷ் தலைமையில் 4 காரில் வந்த 15 வருமானவரித்துறை அதிகாரிகள் கொமேஸ்வரம் ஏ.கஸ்பாவில் உள்ளே 2- உள்ளிட்ட தோல் தொழிற்சாலையில் அதிரடியாக நுழைந்தனர்.

பின்னர் தொழிற்சாலைகளில் உள்ள பதிவேடுகள், கணக்கு விவரங்கள் முக்கிய ஆவணங்களை சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து இன்று 3-வது நாளாக சோதனையை தீவிர படுத்தினர். இந்த நிலையில் தொழிற்சாலையில் இருந்து ஆவணங்களை எடுத்து வந்தனர்.

இதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கம்பெனியிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News