உள்ளூர் செய்திகள்

குடியாத்தத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய காட்சி.

குடியாத்தத்தில் 90 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

Published On 2023-07-04 14:32 IST   |   Update On 2023-07-04 14:32:00 IST
  • அமுலு விஜயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
  • ஆக்கிரப்பு செய்யப்பட்டிருந்த 250-க்கும் மேற்பட்ட வீடுகள் அதிகாரிகள் அகற்றினர்

குடியாத்தம்:

குடியாத்தத்தில் 90 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை குடியாத்தம் எம்.எல்.ஏ. அமுலுவிஜயன் வழங்கினார்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றின் கரையில் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி நெல்லூர்பேட்டை, பாவோடும்தோப்பு, என்.எஸ்.கே.நகர், கோபாலபுரம் மற்றும் சுண்ணாம்புப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆற்றின் ஏரிக்கரையில் ஆக்கிரப்பு செய்யப்பட்டிருந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் அதிகாரிகள் அகற்றினர்.

வீடுகளை இழந்த பொதுமக்கள் தங்கும் வசதி இன்றி கடும் அவதி அடைந்தனர். எனவே ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது வீடுகளை இழந்தவர்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வீடுகளை இழந்த 252 பேருக்கும், 2-ம் கட்டமாக 57 பேருக்கும் ராமாலை ஊராட்சியில் வழங்கினார்.

இதனை தொடர்ந்து தற்போது 3-ம் கட்டமாக பங்கரிஷிகுப்பம் பகுதியில் 90 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க ப்பட்டது. இதற்காக நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

தாசில்தார் விஜயகுமார் முன்னிலை வகித்தார். துணைதாசில்தார் சுபிச்சந்தர் அனைவரையும் வரவேற்றார்.

குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன், குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு அழைப்பா ளராக குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன் கலந்துகொண்டு 90 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கி பேசினார். முடிவில் வருவாய் ஆய்வாளர் பலராமபாஸ்கர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News