உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள். போலி டாக்டர் சம்பத்.

போலி டாக்டர் கைது

Published On 2023-04-01 08:44 GMT   |   Update On 2023-04-01 08:44 GMT
  • மேலும் ஒருவர் தப்பி ஓட்டம்
  • மருத்துவ பொருட்கள் பறிமுதல்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சிவக்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் அரசு மருத்துவர் செல்வநாதன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் நேற்று தாமலேரி முத்தூரில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சம்பத் (வயது 48) என்பவர் தனது வீட்டில் நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவரிடம் சுகாதாரத் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது அவர் டிப்ளமோ பார்மசி படித்துவிட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததும் தெரிய வந்தது.

அவரை கைது செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த மருந்து, மாத்திரைகள், சிரஞ்சி உள்ளிட்ட மருத்துவ உபகரணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதே போன்று மூக்கனூர் புதூர் பகுதியில் ஆரோக்கியராஜ் என்பவர் வீட்டில் மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார்.

சுகாதாரத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது ஆரோக்கியராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

போலி மருத்துவர் ஆரோக்கியராஜ் என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News