சிலம்பாட்டம் போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்த காட்சி.
ஏலகிரி மலையில் சிலம்பாட்ட போட்டி
- மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. ஏலகிரி மலையில் அத்தனாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டம் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
இப்போட்டியில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் கலந்து கொண்டனர். போட்டியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் தொடங்கி வைத்தார்.
மேலும் இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டி தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) வரை நடைபெறுகின்றன.
தொடக்க விழா போட்டியிற்கு ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜ ஸ்ரீ கிரிவேலன் தலைமை தாங்கினார்.
மேலும் இவ்விழாவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமால் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள் வார்டு உறுப்பினர்கள், பள்ளியின் மாணவ மாணவிகள், சமூக ஆர்வலர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.