உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-10 14:59 IST   |   Update On 2023-03-10 14:59:00 IST
  • திருப்பத்தூரில் நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் ஒன்றிய காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பத்தூரில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் இ.பாரத் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ஜானிஜாவித் முன்னில வகித்தார்.

மாவட்ட தலைவர் ச.பிரபு ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர்கள் முனி சாமி, சாந்தசீலன், மாவட்ட துணை தலைவர் வெங்கடே சன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் நெடுமாறன்,பாரி வள்ளல் உள்பட பலர் பேசினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் கொத்தூர் மகேஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News