உள்ளூர் செய்திகள்

பள்ளி வாகனங்களை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்த காட்சி.

திருப்பத்தூரில் 179 பள்ளிவாகனங்களை கலெக்டர் ஆய்வு

Published On 2022-07-11 09:23 GMT   |   Update On 2022-07-11 09:23 GMT
  • 17 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது
  • டிரைவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்

திருப்பத்தூர்:

தமிழகத்தில் கோடை விடுமுறை முடித்து அனைத்து பள்ளிகளும் கடந்த மாதம் திறக்கப்பட்டது. அரசு பள்ளிகள் தவிர்த்து தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களை தங்களுடைய வாகனங்களில் பள்ளிக்கு அழைத்துச் சென்று வருகின்றனர் இந்த நிலையில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறித்து இருக்கிறது. இந்த பாதுகாப்பு விதி விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்று பள்ளி வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் நேற்று திருப்பத்தூர் மற்றும் நாட்றம்பள்ளி தாலுகா பகுதிகளில் உள்ளடக்கிய திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அலுவலகத்தைச் சார்ந்த பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. கலெக்டர் அமர் குஷ்வாஹா கலந்துகொண்டு பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தும், மேலும் பள்ளி வாகனங்களை ஓட்டிப் பார்த்தும் டிரைவர்களுக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

இதில் திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் காளியப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார், தாசிலர் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆய்வின்போது வாகனங்களின் அவசரகால வழி, முதலுதவி பெட்டி, தீயணைப்புக் கருவி, மற்றும் மாணவர்கள் உட்காரும் இருக்கைகள் கைப்பிடிகள் முறையாக உள்ளதா என சரிபார்க்கப்பட்டது. 179 பள்ளி வாகனங்களில் 17 வாகனங்கள் சிறு குறைகளுக்காக திருப்பி அனுப்பப்பட்டு, சரி செய்து பின்பு அலுவலக வேலை நாட்களில் ஆஜர் படுத்த அறிவுறுத்தப்பட்டது.

பள்ளி வேன் கலெக்டர் ஓட்டினார்

ஆய்வின் போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளி வேன் கலெக்டர் ஓட்டி பார்த்தார் ரிவர்ஸ் கியர் போட்டு அதே இடத்தில் நிறுத்தினார், பள்ளி வாகனத்தில் அலாரம் அடிக்காத வாகனங்கள் மற்றும் சீட் கைப்பிடிகளில் இரும்பு ராடுகள் வெளியே தெரிவதால் பள்ளி மானாமாளிகள் வண்டியில் ஏறி இறங்கும் போது காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக உடனடியாக மாற்ற கூறினார் அவசரமாக இறங்கும் கதவு சில வாகனங்களை திறக்காததால் உடனடியாக மாற்றக் கூறி, முதலுதவி பெர்ட்டிகள் உள்ள மருந்துகளை முழுமையாக வைக்கவும் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News