உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை

Published On 2023-05-14 13:29 IST   |   Update On 2023-05-14 13:29:00 IST
  • போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேச்சு
  • 100 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அபராதம்

வாணியம்பாடி:

வாணியம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான காவல்துறை கலந்தாய்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அனைத்து இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேசுகையில்:-

காவல்துறை சார்பில் விபத்துக்களை குறைக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும். விபத்தை குறைப்பதில் முன்மாதிரியாக விளங்கும் திருப்பத்தூர் மாவட்டம் தொடர்ந்து அச்செயலை செய்து பொதுமக்களின் விலை மதிப்பற்ற உயிரை இழக்காமல் பாதுகாக்க வேண்டும் என்றார்.

அதனைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடைபெற்ற அதிரடி வாகன சோதனையில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டியவர்கள், ஒரே வாகனத்தில் 3 பேர் சென்றது.

அதிவேகமாக வாகனம் ஓட்டியது, வாகனங்களை தவறான பாதையில் இயக்கியது உள்பட போக்குவரத்து விதிகளை மீறிய 100 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்தும், வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News