உள்ளூர் செய்திகள்
நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது
- வேட்டைக்கு கொண்டு சென்ற பொருட்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் வனசரகர் சங்கரய்யா தலைமையிலான வனதுறையினர் இன்று காலை ஆம்பூர் காப்பு காட்டில் நாயக்கனேரி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது பனங்காட்டேரி அடுத்த மூணுகல் மலை அருகே சென்றபோது ஒரு நபர் துப்பாக்கியுடன் சுற்றி திரிவதை பார்த்தனர்.
உடனே அந்த நபரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த நாட்டுதுப்பாக்கி, பேட்டரி உள்ளிட்ட வேட்டைக்கு கொண்டு வந்தபொருட்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர் நாயக்கனேரி ஊராட்சி பனங்காட்டேரியை சேர்ந்த திருப்பதி (வயது23) என்பவரது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த நபரை வனதுறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.