கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
- உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் பெரிய கம்மியப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவரு டைய மகன் ராகவேந்திரன் (வயது 32) உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நோய் பாதிப்பு அதிகமான நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல் வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் நிலத்தில் உள்ள விவசாய கிணற்றில் ராகவேந்திரனின் செருப்பு மிதந்து கொண்டு இருந் தது.
தகவல் அறிந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கி தேடியதில் ராகவேந்திரன் உடலை மீட்டனர்.
இது சம்பந்தமாக ஜோலார்பேட்டை போலீசில் தந்தை காளிதாஸ் புகார் செய்தார்.
அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ராக வேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப் பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.