உள்ளூர் செய்திகள்

ஆம்பூர் அருகே நாயக்கனேரி ஊராட்சி பனங்காட்டேரி பகுதியில் உள்ள மலைச்சாலையில் ஒற்றையானை நிற்கம் காட்சி.

ஆம்பூர் அருகே மலைப்பாதையில் நின்று ஒற்றை யானை அட்டகாசம்

Published On 2022-06-22 11:01 GMT   |   Update On 2022-06-22 11:02 GMT
  • அரிசி, காய்கறி வாகனங்களை வழிமறித்தது
  • மலை கிராம மாணவர்கள் பள்ளிக்கு வர அச்சம்

ஆம்பூர்:

ஆந்திர வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் சுற்றித்திரிகிறது.

விளை நிலங்களுக்குள் புகுந்து அங்கு பல ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர் வகைகளை ஒற்றை யானை மிதித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி பனங்காட்டேரி பகுதியில் உள்ள மலைச்சாலையில் ஒற்றையானை மலைகிராம மக்களை அச்சுறுத்தி வருகிறது.

அங்குள்ள மலை பாதையில் நின்றுகொண்டு வாகனங்களை மறிக்கிறது. மோட்டார் சைக்கிள்களில் அரிசி, காய்கறி ஏற்றி செல்லும் போது வழிமறித்து அவற்றை சேதப்படுத்தி உள்ளது.

தொடர்ந்து மலைப்பாதையில் ஒற்றையானை நின்று கொண்டிருப்பதால் மலைகிராம மக்கள் கீழே இறங்காமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

இன்று காலையிலும் நாயக்கனேரி மலைப்பாதையில் நடுரோட்டில் நின்று வாகனங்களுக்கு வழிவிடாமல் யானை நின்று கொண்டிருந்தது.

இதைக் கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டபடி யானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

தொடர்ந்து மலைப் பாதையை ஒட்டியே ஒற்றையானை இருப்பதால் மலை கிராமங்களில் இருந்து ஆம்பூருக்கு வரும் பள்ளி மாணவர்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர்.

ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News