3,152 பேருக்கு ரூ.8.70 கோடி நலத்திட்ட உதவிகள்
- அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
- அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனைகள் தொடர்பான பல்வேறு துறைகளில் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஜோலார்பேட்டை அருகே உள்ள பால்னாங்குப்பம் கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி வரவேற்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ.வுமான க.தேவராஜி, திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எம் கே ஆர் சூரி யகுமார், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ் சத்யா சதீஷ்குமார், துணைத் தலைவர் ஸ்ரீதேவி காந்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கவிதா தண்டபாணி, சிந்துஜா ஜெகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்துகொண்டு 3152 பயனாளிகளுக்கு ரூ.8.70 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதிஷ் குமார், ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் அன்பழகன், நகர மன்ற துணை தலைவர் சி.எஸ்.பெரியார்தாசன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகாரிகள் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு நன்றி கூறினார்.