உள்ளூர் செய்திகள்

காரில் மது கடத்திய 2 பேர் கைது

Published On 2022-07-07 16:24 IST   |   Update On 2022-07-07 16:24:00 IST
  • போலீசார் மடக்கி பிடித்தனர்
  • 768 மது பாட்டில்கள் பறிமுதல்

ஜோலார்பேட்டை:

கர்நாடக மாநிலத்திலிருந்து காரில் மது பாட்டில்கள் கடத்தி வருவதாக வேலூர் மத்திய சிறப்பு தனிப்பட்ட பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் மத்திய சிறப்பு தனி படை பிரிவினர் நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து காரை பின் தொடர்ந்து வந்தனர்.

அப்போது ஜோலார்பேட்டை போலீசார் மக்கானூர் பகுதியில் தனிப்படை போலீசாருடன் சேர்ந்து காரை மடக்கி பிடித்துததத கசாதனை செய்தனர். அதில் கர்நாடக மாநில 768 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் மது பாட்டில் கடத்தியவர்கள் திருப்பத்தூர் அடுத்த இலக்கிநாயக்கன்பட்டி சேர்ந்த செல்வக்குமார் (வயது 26), பெரியகரம் பகுதி அன்னை சத்யா நகரை சேர்ந்த கமலேசன் (வயது 42) என்பதும் இவர்கள் அடிக்கடி கர்நாடக மாநிலத்திற்கு சென்று மது பாட்டில்களை வாங்கி வந்து கள்ளத்தனமாக விற்பனை செய்வது தெரியவந்தது.

இதனையடுத்து ஜோலார்பேட்டை போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 768 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து இருவரையும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News