உள்ளூர் செய்திகள்

ஆட்டோவில் தெருத்தெருவாக ஒலிபெருக்கி செய்ததை படத்தில் காணலாம்.

பொருளை எடுத்தவங்க அதே இடத்துல வச்சிருங்க ஆட்டோவில் தெருத்தெருவாக ஒலிபெருக்கி

Published On 2023-09-30 09:46 GMT   |   Update On 2023-09-30 09:46 GMT
  • புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.
  • கார் ஜாக்கி, மேஜை உள்ளிட்ட பொருட்கள் காணவில்லை என தெரிய வருகிறது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பிரித்து 30 ஆண்டுகள் ஆன நிலையில் கடலூர் தேவனாம்பட்டினத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும் இதன் அருகிலேயே அரசின் பல்துறை விளக்க கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. 11 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சிக்காக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த பகுதியில் பந்தல் அமைப்பாளர்கள் கொண்டு வந்த நாற்காலிகள் மற்றும் கார்பெட், கார் ஜாக்கி, மேஜை உள்ளிட்ட பொருட்கள் காணவில்லை என தெரிய வருகிறது. இந்த பொருட்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் தான் எடுத்திருக்க வேண்டும் என பொருள் உரிமையாளர்கள் போலீசில் தெரிவித்தனர். தேவனாம்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த பொருட்களை எடுத்து இருக்கலாம் என்பதால் அந்த கிராமத்தை சேர்ந்த மீனவ பஞ்சாயத்தில் இதுகுறித்து போலீசார் தெரிவித்தனர். மீனவ பஞ்சாயத்தார் இதுகுறித்து இன்று ஆட்டோ ஒன்றில் ஒலிபெருக்கி கட்டி தெரு தெருவாக அந்த பொருட்களை யாராவது எடுத்து இருந்தால் அதே இடத்தில் வைக்க வேண்டுகோள் விடுத்தனர்.

நமது ஊர் கடற்கரையில் புத்தக கண்காட்சி நடைபெற்ற இடத்தில் இருந்து காணாமல் போன பொருட்களை எடுத்தவர்கள் மீண்டும் அதே இடத்தில் சென்று வைத்து விடுங்கள் . போலீசார் மூலம் கண்டுபிடிக்கப்பட்டால் ஊர் நிர்வாகம் இதற்கு பொறுப்பாகாது என்ற அறிவிப்பை தொடர்ந்து செய்த வண்ணம் இருந்தனர்.

Tags:    

Similar News