உள்ளூர் செய்திகள்

25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக்கொண்ட ஆசிரியர்களும், மாணவர்களையும் படத்தில் காணலாம்.

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர்கள்-மாணவர்கள் சந்திப்பு

Published On 2022-06-08 10:04 GMT   |   Update On 2022-06-08 10:04 GMT
  • தூத்துக்குடியில் 25 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர்களும், அவர்களின் மாணவர்களும் சந்தித்து நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பழைய மாணவ மாணவிகள் தங்கள் பிள்ளைகளுடன் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி துறைமுக கல்விக் கழகநிர்வாகத்தின் கீழ் நடைபெற்றுவரும் துறைமுக மேல்நிலைப்பள்ளியில் 1997ம் ஆண்டு மேல்நிலை கல்வி பயின்ற மாணவ-மாணவிகள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த நிகழ்வு, தூத்துக்குடி துறைமுக சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பழைய மாணவ மாணவிகள் தங்கள் பிள்ளைகளுடன் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர்.

பசுமை நிறைந்த நினைவுகளை மாணவ-மாணவிகள் பலரும் நினைவுகூர்ந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைமை ஆசிரியர்கள் யூஜின் சகாயராஜ், ஹெக்டோ தலைமை தாங்கினார்.

பள்ளி தலைமை ஆசிரியை சர்மிளா முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் உலக பிரகாஷ், சுப்புலட்சுமி வரவேற்றனர். ராமச்சந்திரன் பவானி தொகுத்து வழங்கினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்கள் காந்திமதிநாதன், சுப்பம்மாள், சார்லஸ்ரத்தினராஜ், சரோஜா ஞானம், ராமலட்சுமி, அருண்குமார் மற்றும் தற்போதைய ஆசிரியர்கள் ஆத்தியப்பன், விநாயகம், மஞ்சுளா, அன்னபாக்கியம், கிளாடிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை பழைய மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் தனலட்சுமி, முன்னாள் மாணவர்கள் சக்திவேல், ராமலட்சுமி, வின்சென்ட், அம்மாள், சந்திரசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News