உள்ளூர் செய்திகள்
முத்துமாரியம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு
- அன்னபூரணி அலங்காரத்தில் முத்துமாரியம்மன் அருள் பாலித்தார்
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆனி மாதம் அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டது.
பின்னர் நள்ளிரவு 12 மணி அளவில் அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. அன்னபூரணி அலங்காரத்தில் முத்துமாரியம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.