உள்ளூர் செய்திகள்
ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் சிறப்பு பூஜை கிருத்திகையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய காட்சி.
ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் சிறப்பு பூஜை
- கிருத்திகையொட்டி நடந்தது
- பக்தர்களுக்கு அன்னதானம்
போளூர்:
போளூர் நற்குன்று ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் நேற்று வைகாசி மாத கிருத்திகை கொண்டாடப்பட்டது. காலையில் முருகருக்கு சிறப்பு பூஜை செய்து அபிஷேகம், அலங்காரம், ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுசாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் உற்சவர் கோவில் சுற்றி வலம் வந்து அருள் பாலித்தார்.