உள்ளூர் செய்திகள்

சீறிப்பாய்ந்த காளைகள்.

எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

Published On 2023-10-08 08:26 GMT   |   Update On 2023-10-08 08:26 GMT
  • மாடுகளை வண்ண மலர்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர்
  • காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்

செங்கம்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா இன்று நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை, ஆரணி, செங்கம், வேலூர், குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 150-க்கும் அதிகமான காளைகள் கலந்து கொண்டன. மாடுகளை அதன் உரிமையாளர்கள் வண்ண மலர்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர்.

காளை ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்க ப்பட்டிருந்தன. சாலை நடுவே மண் மற்றும் தேங்காய் நார் கொட்டப்பட்டிருந்தது. விழா தொடங்குவதற்கு முன்னதாக காளைகளுக்கு வீதி காண்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்த பின்னரே போட்டியில் கலந்து கொள்ள அனுமதித்தனர். இதனை தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப் பாய்ந்து ஓடிய காளைகளை பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர்.

விழாவில் மாடு முட்டி காயம் அடைந்தவர்களை, அங்கு முகாமிட்டிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News