உள்ளூர் செய்திகள்
மகளிர் உரிமைத்திட்டத்துக்கு விண்ணப்பம் வினியோகம்
- கட்டணமில்லா புதிய சேமிப்பு வங்கி கணக்கை தொடங்கி பயன்பெறலாம்
- அதகாரி தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக மாவட்டத்தில் உள்ள 991 ரேசன் கடைகள் மூலம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 413 குடும்ப அட்டைதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பம் வழங்கும் பணி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு வங்கி கணக்கு அவசியம் என்பதால் வங்கி கணக்கு இல்லாதவர்கள் அருகில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கட்டணமில்லா புதிய சேமிப்பு வங்கி கணக்கை தொடங்கி பயன்பெறலாம் என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன் தெரிவித்தார்.