உள்ளூர் செய்திகள்

டிரோன் மூலம் நானோ யூரியா உரங்கள் தெளிப்பது குறித்து செயல்விளக்கம்

Published On 2023-06-19 14:53 IST   |   Update On 2023-06-19 14:53:00 IST
  • வேலையாட்கள் பற்றாக்குறை தீர்க்கப்படுகிறது
  • விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகே சு.வாளவெட்டி கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் கரும்பு பயிரில் நானோ யூரியா மற்றும் நானோ டி.ஏ.பி. உரங்களை டிரோன் மூலம் தெளிப் பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண் பிக்கப்பட்டது. செயல்விளக்கத்தை தொடர்ந்து டிரோன் தொழில் நுட்பம், நானோ யூரியா மற்றும் நானோ டி.ஏ.பி. உரங்கள் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத் துரைக்கப்பட்டது.

அப்போது வேளாண் அதிகாரிகள் கூறு கையில்:-

நானோ உரங்களை டிரோன் மூலம் தெளிப்பதன் மூலம் வேலையாட்கள் பற்றாக்குறை தீர்க்கப்படுகிறது.

மேலும் நானோ உரங்கள் இலை வழி தெளிக்கப்படுவதால் மண் மற்றும் நீர் நிலைகள் மாசுபடுவது தவிர்க்கப்படுகிறது. இவற்றை உபயோகிப்பதன் மூலம் விளைச்சல் ஏதும் குறை யாது. செலவினைக் குறைப்பதால் விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.கரும்பு பயிருக்கு ஒரு ஏக்கருக்கு நானோ உரங்கள் மற்றும் டிரோன் தெளிப்பு உள்பட ஒரு முறைக்கு ஏக்கருக்கு ரூ.1,700 வரை செலவாகும்" என்று தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான்கள் மானிய விலையில் வினியோகிக்கப்பட்டன. இதில் வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார், வாழ வச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முத்துகிருஷ்ணன், இப்கோ உரநிறுவன மாநில விற்பனை மேலாளர் சுரேஷ், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சரவணன், வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன் மற்றும் வேளாண்மை அலுவலர்கள், விவசாயி கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News