உள்ளூர் செய்திகள்

டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்த காட்சி.

ஏரி, குளங்களை கண்காணிக்க குழு

Published On 2023-12-03 13:09 IST   |   Update On 2023-12-03 13:09:00 IST
  • வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி தகவல்
  • கயிறுகள் மூலம் மீட்க நடவடிக்கை

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி உட்கோட்டத்தில் உள்ள ஆரணி டவுன், கண்ணமங்கலம், களம்பூர், சந்தவாசல் உள்ளிட்டவை களில் உள்ள வழக்கு சம்பந்தமாக கோப்புகளை வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி திடீர் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

மழைகாலங்களில் புயல் காரணமாக திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள சுமார் 153 ஏரி, குளங்களை தலைமை காவலர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு மூலம் கண்காணித்து வருகின்றோம்.

உடையும் அபாயம் உள்ள ஏரி குளங்கள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதுகாக்க கயிறுகள் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் உள்ளது. ஆரணி நகருக்குள் கனரக வாகனங்கள் செல்லாமல் பைபாஸில் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளபடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் டி.எஸ்.பி ரவிசந்திரன் இன்ஸ்பெ க்டர்கள் ராஜங்கம், சுப்பிரமணியன், மகாலட்சுமி, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News