உள்ளூர் செய்திகள்
சனிக்கவாடி கிராமத்தில் அர்ஜூனன் தபசு
- 9-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
போளூர்:
போளூர் அருகே உள்ள சனிக்க வாடி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 9-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது விழாவின் முக்கிய நிகழ்வான அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் அர்ஜுனன் தபசு மரம் ஏரி பாசுபதம் என்ற அஸ்திரம் வேண்டி ஒற்றை காலில் நின்றவாறு தவம் செய்தார் தொடர்ந்து அர்ஜுனன் வில்வ இலைகளையும் திருமண மாகாத பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் எலுமிச்சம் பழங்களும் குழந்தை வரம் கோரும் பக்தர்களிடையே வீசினார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் விழாவை ஊர் பொதுமக்களும் இளைஞர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.