உள்ளூர் செய்திகள்

2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்த காட்சி.

2 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சீல்

Published On 2023-06-16 14:46 IST   |   Update On 2023-06-16 14:46:00 IST
  • உணவு பாதுகாப்பு துறை ஆணைய உத்தரவு
  • அதிகாரிகள் நடவடிக்கை

ஆரணி:

ஆரணி-சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக பராமரிக்கப்படவில்லை என ஏற்கனவே மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மூலமாக ஆய்வு மேற்கொண்டு அறிவிப்பு நோட்டீஸ் வழங் கப்பட்டது.

இதுதொடர்பாக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை ஆணைய உத்தரவின் படி திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு நிலையை அலுவலர் டாக்டர் ராமகிருஷ் ணன் தலைமையில் நேற்று மாலை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 'சீல்' வைக்கப்பட்டது. இதேபோன்று ஆரணி ராட்டினமங்கலம் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.

அப்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சேகர், இளங்கோ, சுப்ரமணி, எழில் உள்பட பலர் இருந்தனர்.

Tags:    

Similar News