உள்ளூர் செய்திகள்

மின்மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுவதை படத்தில் காணலாம்.

திருவணப்பட்டி ஏரி நீரை வெளியேற்றி மீன் பிடிக்கும் ஒப்பந்ததாரர்

Published On 2023-06-03 15:01 IST   |   Update On 2023-06-03 15:01:00 IST
  • டிராக்டர் கொண்டு 10 இன்ச் பைப் மூலம் ஏரியிலுள்ள நீரை வெளியேற்றி வருகிறார்.
  • ஏரி நீரை வெளியேற்றி வருவது அப்பகுதி விவசாயிகளை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த திருவணப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட திருவணப்பட்டி பூங்காநகர் ஏரி சுமார 26.57 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் வருடந்தோரும் மீன்பிடி ஏலம் நடத்தப்பட்டு, அதன்மூலம் ஒப்பந்ததாரர் மீன்பிடித்து வருவது வழக்கம்.

இந்நிலையில் சின்னகாமாட்சிபட்டி கிராமத்தை சேர்ந்த தீர்த்தகிரி என்பவர் இந்த ஆண்டு மீன்பிடி ஏலம் எடுத்துள்ளார். ஒப்பந்தகாலம் முடிவடைந்து வரும் நிலையில், ஒப்பந்ததாரர் தீர்த்தகிரி ஏரியில் உள்ள மீன்கள் முழுவதையும் பிடிப்பதற்காக, கடந்த இரண்டு நாட்களாக டிராக்டர் கொண்டு 10 இன்ச் பைப் மூலம் ஏரியிலுள்ள நீரை வெளியேற்றி வருகிறார். இந்த ஏரி மூலம் 1000த்திற்கும் மேற்பட்ட விவசாய நிலம் பாசன வசதி பெறுவதுடன், சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில் மீன்பிடி ஒப்பந்ததாரர் தன்னிச்சையாக எவ்வித அனுமதியும் பெறாமல் ஏரி நீரை வெளியேற்றி வருவது அப்பகுதியில் உள்ள விவசாயிகளை மற்றும் பொதுமக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமலைராஜனிடம் கேட்டபோது, தற்போது ஜமாபந்தி நடப்பதால் கிராம நிர்வாக அலுவலரை நேரில் அனுப்பி விசாரித்து, அவரிடமிருந்து புகார் மனு பெற்று ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News