உள்ளூர் செய்திகள்
ஜோலார்பேட்டை பகுதியில் நேற்று இரவு பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி.
- வெளி மாநிலத்திற்கு கடத்தியதை போலீசார் பறிமுதல் செய்தனர்
- போலீசாரின் ரோந்து பணியில் சிக்கியது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் டி.எஸ்.பி. கணேஷ் மேற்பார்வையில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் காதர்கான் மற்றும் ரகுராம் உள்ளிட்ட போலீசார் ஜே.என்.ஆர் நகர் பகுதிக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு விநியோகிக்கும் ரேசன் அரிசியை 30 பைகளில 1.5 டன் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரேசன் அரிசி பதுக்கி வைத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை திருப்பத்தூர் உணவு பாதுகாப்பு கிடங்கில் ஒப்படைத்தனர்.