உள்ளூர் செய்திகள்

சுவாமி அய்யப்பன்-அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் தனித்தனியாக வலம் வந்தபோது எடுத்த படம்.


ஆரியங்காவு கோவிலில் சுவாமி அய்யப்பனுக்கு திருக்கல்யாணம்

Published On 2022-12-27 09:02 GMT   |   Update On 2022-12-27 09:02 GMT
  • அச்சன் கோவில், ஆரியங்காவு, குளத்துபுழா, பந்தளம், சபரிமலை என 5 இடங்களில் அய்யப்பன் அவதரித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
  • ஆரியங்காவு அய்யப்பனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது.

செங்கோட்டை:

அண்டை மாநிலமான கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சாஸ்தாவான அய்யப்பன் ஐந்துமலைக்கு அதிபதியாவர். அவர் அச்சன் கோவில், ஆரியங்காவு, குளத்துபுழா, பந்தளம், சபரிமலை என 5 இடங்களில் அவதரித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

திருக்கல்யாணம்

இதில் ஆரியங்காவு கோவிலில் குடி கொண்டுள்ள அய்யப் பனுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி மகோற்சவ விழா கூடுதல் தனிசிறப்பாகும். இந்த விழா முடிவில் பகவதி அம்மனுடன் திருமணம் நடைபெறுவது ஐதீகம்.

நிறைவு நாளுக்கு முன்பு அய்யப்பன் கோவிலில் நிச்சயதார்த்தத்திற்கு பின்னர் சுவாமி- அம்பாள் தனித்தனியாக அலங்கரிக்கபட்ட சப்பரத்தில் கோவிலை வலம் வந்து வசந்த மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறும்.

பாண்டி முடிப்பு

அதன்படி கடந்த 16-ந் தேதி மகோற்சவம் விழா தொடங்கியதையடுத்து ஆரியங்காவு அய்யப்பனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான ஆரியங்காவு அய்யப்பன் கோவிலில் பாண்டி முடிப்பும் நடைபெற்றது.பெண் அழைப்பு நிகழ்ச்சியானது ஆரியங்காவு அருகே மாம்பழத்துறை பகவதி அம்மன் கோவிலில் இருந்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக நடந்தது.

தொடர்ந்து மணப் பெண்ணிற்கு பட்டு, மாலை வழங்குதல், சீர்வரிசை செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அரங்கேறியது.நேற்றிரவு அய்யப்பனும், அம்பாளும் அலங்கரிக்கபட்ட தனி சப்பரத்தில் கோவில் வெளிபிரகாரத்தை வலம் வந்து பின் வசந்த மண்டபத்தில் கல்யாண வைபோகம் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கா னோர் பங்கேற்று அய்யப் பனின் திருமண நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். முடிவில் அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கபட்டது. இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News