உள்ளூர் செய்திகள்

பார்வதி தேவி சமேத சிவேந்திரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. சீர்வரிசையுடன் கலந்து கொண்ட பக்தர்கள்.

தஞ்சை ராஜகோபாலசாமி கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2023-07-10 09:16 GMT   |   Update On 2023-07-10 09:16 GMT
  • நாலுகால் மண்டபத்திலிருந்து கல்யாண சீர்வரிசைகளை பக்தர்கள் எடுத்து வந்தனர்.
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோவிலில் மூலவராக விஜயவல்லி மற்றும் சுதர்சன வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் திகழ்கிறார்.

பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு திருக்கல்யாணம் நடத்தி வருகின்றனர். நீண்ட நாட்கள் தடைபெற்ற திருமணங்கள் சக்கரத்தாழ்வார் அருளால் திருமணம் கைகூடுகிறது.

இங்கு பார்வதி தேவி மற்றும் கங்கா தேவி சமேதராக சிவேந்திரர் காட்சி தருகிறார்.

இத்தகைய பல்வேறு சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் 18-ம் ஆண்டு பார்வதி தேவி சமேத சிவேந்திர சுவாமிக்கு திருக்கல்யாணத்தை முன்னிட்டு நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் இருந்து கல்யாண சீர்வரிசைகள் பக்தர்கள் எடுத்து வந்தனர்.

பின்னர் திருக்கல்யாணம் உற்சவம் கோலாகலமாக தொடங்கியது.

திருமண சம்பிரதாயங்களை தொடர்ந்து பார்வதிதேவி சமேத சிவேந்திரருக்கு மாங்கல்ய தாரணம் வெகுவிமரிசையாக நடந்த து.

அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News