உள்ளூர் செய்திகள்

காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா

Published On 2023-03-05 09:24 GMT   |   Update On 2023-03-05 09:34 GMT
  • மாசிமகத் தேர்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
  • அச்சகர்களின் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவ சடங்குகள் நடந்தன.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசிமகத் தேர்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று பெட்டத்தம்மன் மலையிலிருந்து அம்மனை அழைத்து வந்தனர்.

இன்று காலை 4 மணிக்கு கோயில் நடை திறந்து மூலவருக்கு திருமஞ்சனம் பூஜை செய்யப்பட்டது. பின்பு திருமணக் கோலத்தில் உற்சவ மூர்த்தி அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மண்டபத்துக்கு எழுந்தளினார்.

அச்சகர்களின் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவ சடங்குகள் நடந்தன. புண்ணிய வாகம் முடிந்த பின் அரங்கநாத பெருமாளுக்கு பூணூல் அணிவித்து கங்கணம் கட்டி குலம் வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து கோவிலில் ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி வேதவியாச பட்டர் ஆகியோர் மஞ்சள் இடித்து மாங்கல்யா பூஜைக்கு கொடுத்தனர்.

அரங்கநாதர் சார்பில் அர்ச்சர்கள் திருமாங்கல்யத்தை ஸ்ரீதேவி, பூதேவிக்கு அணிவித்தனர்.

பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகளின் சார்பில் மஞ்சள், தாலி கயிறு ஆகியவை வழங்கப்பட்டன.

நாளை அதிகாலை 5.30 மணிக்கு அரங்கநாத பெருமாளுக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தேருக்கு எழுந்தளினார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.

விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். இதில் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, கோவில் செயல் அலுவலர் லோகநாதன், காரமடை தி.மு.க. நகர செயலாளர் வெங்கடேஷ், காரமடை தாச பளஞ்சிக மகாஜன சங்க தலைவர் கே.பி.வி.கோவிந்தன், கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் விக்னேஷ் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News