உள்ளூர் செய்திகள்

தனி ஒருவனாக 52 இருசக்கர வாகனங்களை திருடிய திருடன்

Published On 2023-12-04 15:45 IST   |   Update On 2023-12-04 15:45:00 IST
  • ஓசூரில் தனி ஒருவனாக 52 இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது
  • போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

ஓசூர் மாநகர பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தனி ஒருவனாக 52 இருசக்கர வாகனங்களை திருடி விற்ற பலே திருடனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒசூர் பகுதியில் கடந்த மாதம் தொடர் இரு சக்கர வாகனத் திருட்டு கடை வீதி பகுதிகளில் நடந்து வந்தது. இது குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தன. சம்பவம் நடந்த பகுதிகளில் வைத்திருந்த சி.சி.டிவி கேமாரா பதிவுகளை கைபற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஒரே நபர் வாகனத்தை எடுத்து செல்லும் காட்சி பதிவானது.

இதனையடுத்து அந்த திருடன் குறித்து போலீசார் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினர் அதில் தருமபுரி மாவட்டம், ஜிட்டான்டஅள்ளியை சேர்ந்த கண்ணன்(24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் தான் ஓசூர் நகர பகுதிகளில், தனி ஒருவானக விலை உயர்வான 52 இருசக்கர வாகனங்களை திருடி விற்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து அவர் மீது பல்வேறு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். விரைவாக செயல்பட்டு திருடனை பிடித்த ஓசூர் அட்கோ போலீஸ் இன்ஸ் பெக்டர் பத்மாவதி, சப்-இன்ஸ்பெக்டர் வினோத் உள்ளிட்ட போலீசாருக்கு, மாவட்ட எஸ்.பி. சரோஜ் டாகூர் பாராட்டு, தெரிவித்தார்.

Tags:    

Similar News