உள்ளூர் செய்திகள்

பள்ளியில் இரவு வரை இறக்கப்படாத நிலையில் உள்ள தேசியக்கொடி.

பள்ளியில் நள்ளிரவு வரை தேசிய கொடி இறக்கப்படாததால் பரபரப்பு

Published On 2023-01-27 09:40 GMT   |   Update On 2023-01-27 09:40 GMT
  • பள்ளியில் தலைமை ஆசிரியை தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
  • இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

சீர்காழி:

74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சீர்காழியில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளி, தனியார் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி உள்ளது.

இங்கு சுமார் 25 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் குடியரசு தினத்தையொட்டி அப்பள்ளியில் தலைமை ஆசிரியை தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு, இனிப்புகளை வழங்கினார்.

அதன் பின்னர் பள்ளிக்கூடம் மூடப்பட்டு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லத்திற்கு திரும்பினார்.

ஆனால் ஏற்றப்பட்ட தேசியக்கொடி மாலை 6 மணி இறக்கப்பட வேண்டும் என்ற மரபு இருந்தும் இரவு வரை தேசியக்கொடி பறந்தவாறு இருந்தது.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இடையே தேசியக் கொடி அவமதிக்கப்பட்டது குறித்து மனவருத்தத்தை ஏற்படுத்தியது.

இரவு வரை தேசியக்கொடி இறக்கப்படாமல் பறந்த வாறு இருப்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News